Friday 20 November 2015

எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்....

கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம்.
கடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களையும் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்.

                                   
எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது.
எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.
‪#‎பல்லி‬
உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..?
அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள்.
இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.
‪#‎ஈ‬
சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும்.
அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள்.
இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள்.
இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.
‪#‎கொசுக்கள்‬
கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும்.
மேலும் பல கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன.
எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள்.
இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.
‪#‎கரப்பான்_பூச்சி‬
கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம்.
அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.
‪#‎மூட்டைப்பூச்சி‬
மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்து விடும்.

Tuesday 3 November 2015

கிரிக்கெட் நட்சத்திரங்களின் முந்தைய வேலை விவரம்: | Previous Job of Cricket Stars

கிரிக்கெட் பிரபலங்கள் ஒவ்வருக்கும் தனி திறமை உண்டு.சிலர் பேட்டிங்கிலும் சிலர் பந்துவீச்சுலும் சிறந்து விளங்குவர்.தங்களது திறமையை வைத்து நிறைய பேரும் புகழும் அடைந்து இருக்கீறார்கள்.ஆனால் கிரிக்கெட் ஆடுவதற்கு முன்பு அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியுமாஅவர்கள் முந்தைய வேலை பற்றிய விவரம் இதோ.



M S டோனி :

இந்திய கேப்டன் டோனி ரஞ்சி கோப்பை விளையாடுவதற்கு முன்பு கரக்பூர் ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் ,ரயில் டிக்கெட் சேகரிப்பலராக பணியாற்றினார்.

ஷேன் பாண்ட்:

அதிவேக நியூசிலாந்து பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் தனது கிரிக்கெட் வாழ்வை தொடங்குவதற்கு முன்னால் போலீஸ் அதிகாரியாக பணியாற்றினார்.

நாதன் லியோன்:

ஆஸ்திரேலியா அணியின் சுழல் பந்து வீச்சாளர் நாதன் லியோன் மைதான பராமரிப்பாளராக பணியாற்றினார்அவர் திறமையை கண்டு டாரேன் பெர்ரி என்பவர் இவரை கிரிக்கெட்டுக்குள் நுழைத்தார்.

கிரேக் சாப்பல்:

பழம்பெரும் கிரிக்கெட் வீரர் கிரேக் சாப்பல்கிரிக்கெட்டில் நுழைவதற்கு முன்னால்பேஸ்பால் விளையாட்டு வீரராக பணியாற்றினார்.

டூவைன் லேவேரோக்:

2007 ஆம் ஆண்டு நடத்த உலக கோப்பை போட்டியில் அபார கேட்ச் பிடித்த பெர்முடா அணியை சேர்ந்த டூவைன் லேவேரோக் போலீஸ் அதிகாரியாக தனது வாழ்வினை தொடர்ந்தார்.

பிராட் ஹாட்ஜ்:

ஆஸ்திரேலிய இடது கை ஸ்பின்னர் பிராட் ஹாட்ஜ் அவர் ஒரு கிரிக்கெட் வீரர் ஆவதற்கு முன் ஒரு பெட்ரோல் பம்ப் ஊழியர்.




தொப்பையை குறைக்க எளிய வழிகள் - Simple Ways To Reduce Belly fat:



இப்போ எல்லாம் சிட்டி லைப் வாழும் மக்கள் உடல் உழைப்பின்றி அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஆரோக்ய வாழ்வை பின்பற்ற முடியாமல் நவீன காலத்துக்கு ஏற்ப ஜங்க் உணவுகளை எடுத்து கொள்கிறார்கள்.பொதுவாக உடற்பயிற்சி செய்தால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும்.

அத்தகைய உடற்பயிற்சியுடன் சேர்த்து பின்வரும் குறிப்புகளை பின்பற்றினால் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும்.

Tips 1 :

தண்ணீர்: தினமும் குறைத்தது 3-5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனை சீரான இடைவேலையில் பருகி வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி, மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு நீங்கும்.

Tips:2:

உப்பு: உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதனை சேர்க்கும் போது உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கி இருக்கும். இதற்கு மாறாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

Tips:3:

தேன்: உப்பை போன்று சர்க்கரையும் தொப்பைக்கு ஒரு முக்கிய காரணம். ஆகையால் உணவில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால் உங்கள் எடையும் தொப்பையும் குறையும்.

Tips:4:

அவகேடோ: பழவகைகள் நிறைய இருப்பினும் "அவகேடோ" தொப்பை குறைவதற்கு ஒரு பெஸ்ட் பழம்.இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

Tips:5:

க்ரீன் டீ: அட என்னடா யார பாத்தாலும் க்ரீன் டீ குடி உடம்பு குறையும்னு சொல்றங்க்களா?? ஆமாம் உண்மை தாங்க, க்ரீன் டீ குடித்து வந்தால் உங்களுக்கே புரியும். பலனைப் பெறுவீர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

Tips:6:

எலுமிச்சை சாறு: வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். இதனை 1 மாதம் பின்பற்றி வந்தால் தொப்பை குறையும்.

Tips:7:

பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.